சென்னையில் கேரட், திராட்சையில், பீர் தயாரித்து விற்ற பெண் கைது: போலீசார் விசாரணை

சென்னை: திருவள்ளுவர் தினம் முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மது பிரியர்கள் கள்ளச்சந்தையில் மது வாங்க முயன்றனர். அப்போது திருவொற்றியூர் வீட்டிலேயே தயாரித்து கேரட், திராச்சை, பீர் விற்பனை செய்யப்படுவதாக கூட்டம் குவிந்து அலை மோதியது.

இது தொடர்பாக போலீசார் தகவல் அறிந்து திருவொற்றியூர் ஜேஜே.நகர் குடிசை பகுதிக்கு சென்று போலீசார் அங்கு கேரட் திராச்சை பீர் விற்பனை செய்த 54 வயது மேரியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொரோனா காலத்தில் மாதக்கணக்கில் மது கடைகள் மூடப்பட்டது மதுபிரியர்கள் கள்ளச்சந்தையில் மது பாட்டில் தேடி சென்றனர். அப்போது சட்டவிரோதமாக கேரட் மற்றும் திராச்சைகளை கொண்டு பீர் தயாரித்து மது பிரியர்களுக்கு மேரி வழங்கி வந்துள்ளார்.

அதை அவ்வப்போது தொடர்ந்தும் வந்துள்ளார், நேற்று மது கடைகள் மூடப்பட்டதால் அதை பயன்படுத்தி மதுபிரியர்களுக்கு விற்பனை செய்து கேரட் மற்றும் திராச்சை பீர் தயாரித்து விற்றுள்ளார். இதனை தொடர்ந்து கேரட் திராச்சை பீர் தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மேரியை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.    

Related Stories: