திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை  அரசு கலைக்கல்லூரி செங்கம் தொகுதியில் இருந்து 90 கி,மீ தொலைவில் உள்ளது, இந்தாண்டு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிகளில் மனு போட்ட மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் ஆகும். அதில் செங்கம் தொகுதியில் மட்டும் 4,700 மாணவர்கள் மனு அளித்துள்ளனர். அதில் 1,200 மாணவர்கள் அரசு கலைக்கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு கலைக்கல்லூரி செல்ல நீண்ட தூரம் செல்வதால் பேருந்து வசதியும் அதிகமாக அரசு கல்லூரிகளையும் உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை தொகுதியில் 3 கல்லூரிகள் உள்ளது. அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணமலை மாவட்டத்தில் சுயநிதி கல்லூரிகள் 24 இருக்கிறது.

இந்த 24 கல்லூரிகளில் 16,161 இடங்கள் உள்ளது என்றும் அதில் 6704 மட்டுமே நிரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சுயநிதி கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக காணப்படுகின்றது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த பொன்முடி காலத்திற்கேற்ப அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப தீர்வு காணப்படும் என்று பதில் அளித்துள்ளார்.

Related Stories: