பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா, அங்கன்வாடி, சுகாதாரத்துறை அலுவலக கட்டிடங்கள்

*அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

சித்தூர் : பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா, அங்கன்வாடி மற்றும்  சுகாதாரத்துறை அலுவலக கட்டிடங்களை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.சித்தூர் மாவட்டம், பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா, அங்கன்வாடி மற்றும்  சுகாதாரத்துறை அலுவலக கட்டிடங்களை நேற்று வனத்துறை மற்றும் சுங்கத்துறை மின்சார துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

முதல்வர் ஜெகன்மோகன் விவசாயிகளுக்கும், வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறார். தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளிலும், கிராமங்களிலும், விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் விவசாய பரோசா மையங்களை திறக்கப்பட்டு வருகிறது.விவசாயிகளுக்கு தரமான விதை, தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து தானியங்கள்  கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு  அனைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக விவசாய பரோசா கேந்திராக்களை மாநில அரசு அமைத்துள்ளது. கிராம மற்றும் நகரங்களில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு கட்டப்பட்டு வருகிறது.

இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசு எடுத்து வருகிறது. தற்போது தேசிரெட்டி கரிபள்ளியில் விவசாய பரோசா கேந்திரா, மிட்டப்பள்ளியில் அங்கன்வாடி மையம், ஊத்துப்பள்ளியில் ஒய்எஸ்ஆர் ஹெல்த் கிளினிக் ஆகிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைய வேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும் விளைச்சல் கிடைப்பதை உறுதி செய்யவும், அதிகாரிகள் அனைத்து விதமான சேவைகளையும் வழங்க வேண்டும்.

விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமப்புறங்களில் ஒவ்வொரு மாதமும் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிரிடப்படும் பயிர்கள் சேதமடைந்தால் பயிர் காப்பீடு மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.

எதற்காக விவசாயிகள் அனைவரும் முன்பதிவு அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அலுவலகங்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு வந்து சேரும்.இவ்வாறு, அவர் பேசினார்.அப்போது ஜில்லா பரிஷத் தலைவர் சோமுசேகர் மற்றும் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: