பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்தூர்பேட்டை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆட்டு சந்தையில் சென்னை, திருச்சி, கடலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து ெகாண்டனர். வழக்கமாக விற்பனையான ஆடுகளின் விலைகளை விட தற்போது விலை கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரூபாய் 7 ஆயிரத்துக்கு கடந்த வாரம் விற்பனையான ஆட்டின் விலை தற்போது ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையில் விற்பனை ஆனதாக தெரிவித்தனர். சில தினங்களில் பொங்கல் பண்டிகை வர இறுப்பதால் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என தேவையான ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதனால் உளுந்தூர்பேட்டை சந்தையில் இன்று அதிகாலை முதல் பரபரப்பு ஏற்பட்டது. வாகன நெரிசலும் ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூபாய் ஒரு கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். ஆட்டு சந்தை காரணமாக அங்குள்ள டீக்கடை, ஓட்டல்களிலும் வியாபாரம் களைகட்டியது.

Related Stories: