முதல் சோலார் மின் உற்பத்தி திட்டத்தை திருவாரூரில் முதல்வர் திறந்து வைப்பார்: பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் ஜெயகொண்டம் க.சொ.க.கண்ணன் (திமுக) ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி செயல்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என்று கேட்டார். அதற்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செந்தில்பாலாஜி பதிலளித்து பேசியதாவது: கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி ஓர் அரசாணையை வெளியிட்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களை, அரசு வழங்கிய எந்த இழப்பீட்டுத் தொகையையும் திரும்ப பெறாமல், விவசாயிகளுக்கே திரும்ப வழங்கும் என்று அறிவித்து அந்த விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலங்களை திரும்ப முதல்வர்  ஒப்படைத்தார். அனைத்து மாவட்டங்களும் சோலார் மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் திருவாரூர் மாவட்டத்தில் முதல் திட்டமாக, முதல் சோலார் மின் உற்பத்திக்கான திட்டத்தினை தொடங்கிவைக்கவுள்ளார்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: