குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது எந்த மாதிரியான மனநிலை?: இந்த மாதிரி எப்படி சிந்திக்க முடிகிறது என திருமாவளவன் கேள்வி

சென்னை: நாட்டுப்புற கலைஞர்களின் தேவையை முதலமைச்சரிடம் தெரிவித்து விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை இலயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீதி விருது வழங்கும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது மற்றும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அனைவருக்கும் சமூக நிதி, சமஉரிமை, பொருளாதார வளர்ச்சி என்பதில் இந்த அரசு எவ்வளவு கவனம் கொண்டுள்ளதோ, அதேபோல கலை மற்றும் பண்பாட்டிலும் அக்கறை கொண்டுள்ளது என்றார்.

கலையும், கலாச்சாரமும் மக்களுக்கு இன்றியமையாதது என்ற அவர், கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அதை மனிதர்கள் குடிக்க வேண்டும் என நினைப்பது என்னமாதிரியான மனநிலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். எப்படி இந்த மாதிரி சிந்திக்க முடிகிறது என்ற அவர் முதலில் இந்த மாதிரியான உளவியலை நீக்க வேண்டும் என்றார். நாட்டுப்புற கலைஞர்களின் களத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக தெரிவித்த திருமாவளவன் கலைஞர்கள் ஒருமித்த சிந்தனையோடு பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Related Stories: