பொங்கல், முகூர்த்த நாட்கள் எதிரொலி ஓசூரில் பூக்கள் விலை திடீர் உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

ஓசூர்: பொங்கல் பண்டிகை மற்றும் மூகூர்த்த நாட்கள் வர உள்ளதால், ஓசூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீரான தட்பவெப்ப நிலை கொண்டுள்ளதால் காய்கறிகள், பூ வகைகள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகளுக்கு அடுத்தபடியாக கீரைகள், கொத்தமல்லி, புதினா சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், சாமந்தி, கனகாம்பரம், செண்டுமல்லி, மல்லி, ரோஜா, ஜர்பாரா மற்றும் கேரட், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.

அறுவடைக்கு பின் அதிகம் ரோஜா பூக்கள் வெளிநாடுகளுtக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது போக உள்ளூர் மற்றும் ஆந்திரா,கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  தற்போது ஓசூர் பகுதியில் பொங்கல் பண்டிகை மற்றும் காதலர் தினத்திற்காக சுமார் 2500 ஏக்கர் பரப்பில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் ஏக்கரில் சாமந்தி பூக்கள் அதிகம் சாகுபடி செய்யபட்டு உள்ளது. பொங்கலுக்கு 11 நாட்களே உள்ள நிலையில், சாமந்தி மற்றும் ரோஜா பூக்கள் அறுவடை பணிகள் துவங்கி உள்ளது.  ஓசூர் மார்க்ெகட்டில் நேற்று பட்டன் ரோஸ் ஒரு கிலோ ₹100க்கு விற்பனையானது. அதே போல் சாமந்தி ₹60, அரளி ₹160, செண்டு மல்லி ₹40, ஒரு ரோஜா பூ ₹2க்கு விற்பனையானது. கடந்த நாட்களை போல் இன்றி தற்போது விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: