வேலூர் மண்டலத்தில் போலி ஆவணத்தில் பதிவான ரூ.88.19 லட்சம் பத்திரங்கள் ரத்து

வேலூர்:தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் சட்டத்தை கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து வேலூர் பதிவு மாவட்டத்தில் மட்டும் 4 போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ரூ.88.19 லட்சம் மதிப்பிலான பத்திரங்களை மாவட்ட பதிவாளர் சுடரொளி ரத்து செய்துள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் பதிவு மாவட்டத்தில் 4 போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ரூ.88.19 லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய பதிவு மாவட்டங்களில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் தொடர்பாக மாவட்ட பதிவாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்றனர்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம்.

Related Stories: