தமிழகத்தில் நாளை முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3வது தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 18 வருடங்களாகவே போலியோ இல்லாத நிலைமை உள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணமாக உள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலகர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் 3ம் தவணையாக போலியோ தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3ம் தவணை போலியோ வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும்.

Related Stories: