12 ஆண்டுகளுக்கு பின் அதிபராக தேர்வு: பிரேசில் நாட்டின் 39வது அதிபராக பதவியேற்றார் லுலா டா..!

சா பவுலோ: பிரேசில் நாட்டின் 39வது அதிபராக இடதுசாரி தலைவரான லுலாடா சில்வா பதவியேற்றார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனரோ, இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். லுலா டா ஊழல் வழக்கில் சிறை சென்றதால் கடந்த 2018ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவே போல்சனரோ வெற்றிக்கு வித்திட்டது. கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது.

இந்நிலையில் கடந்த நவம்பரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்; போல்சனரோ 49.1% வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலா டா சில்வா 50.9% வாக்குகள் பெற்று 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேசில் அதிபராக தேர்வானார். இந்நிலையில், பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லுலா டா சில்வா பதவியேற்றார்.பிரேசில் நாட்டின் 39வது அதிபராக இடதுசாரி தலைவரான லுலாடா சில்வா பதவியேற்றார்.

Related Stories: