பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மூத்த முன்னோடிகள் 25 பேருக்கு பொற்கிழி: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

ஆலந்தூர்: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சோழிங்கநல்லூர் மத்திய பகுதி 189வது வட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பள்ளிக்கரணையில் நடந்தது. வட்ட செயலாளரும், கவுன்சிலருமான வ.பாபு தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி கே.தேவேந்திரன், வட்ட நிர்வாகிகள் குமரேசன், பி.கே.தங்கம், வெற்றிவேல், சந்திரசேகரன், ஜெகதீசன், ஆனந்தி, வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அமைச்சர் எ.வ.வேலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர், மூத்த முன்னோடிகள் 25 பேருக்கு தலா ரூ5 ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி மற்றும் 1000 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினர்.

பின்னர், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சர்.பி.டி தியாகராயர், காமராஜர், எம்ஜிஆர் ஆகியோர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தனர். மதிய உணவு திட்டத்தோடு முட்டையும் சேர்த்து கலைஞர் வழங்கினார். ஏழை எளிய மாணவர்கள் காலையில் உணவு அருந்தாமல் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வருவார்கள். அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதை சிந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு சுடச்சுட காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மேலும் பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் காரப்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், பாலவாக்கம் சோமு, ஊராட்சி தலைவர் சங்கீதா பாரதி ராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் மூ.மனோகரன், எம்.கே.ஏழுமலை, பஷீர், அரிகிருஷ்ணன், வி.குமார், கே.பாபு, சீனிவாசன், ஹரிஹரன், சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: