பராமரிப்புப்பணிகள் முடியாததால் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதிவரை ரயில்சேவை ரத்து: தெற்கு மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

ராமநாதபுரம்: பராமரிப்புப்பணிகள் முடியாததால் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதிவரை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 31-ம் தேதி வரை சேவை ரத்து என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் பராமரிப்புப்பணிகள் முடியாத நிலையில் மேலும் ஜனவரி 10-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த 23-ம் தேதி அதிகாலை 2.31 மணி அளவில், அபாய ஒலி எழுப்பியது. இதையடுத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஒருவரத்திற்குமேல் சீரமைப்புப்பணிகள் நடந்துவருகிறன. சென்னை ஐஐடி வல்லுநர்கள், காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இம்முடிவுகள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. இதனால், பராமரிப்பு பணிகளை தொடரும் வகையில் பராமரிப்புப்பணிகள் முடியாததால் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: