பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பரிசு வெல்லும் வாய்ப்பு: புளோ ஹாட் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: புளோ ஹாட் நிறுவனம், காஸ் அடுப்பு, சிம்னி, ஹீட்டர்  உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பல ஆண்டுகளாக இதில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், தனது தயாரிப்புகளை வழங்குவோருக்கு பரிசு வெல்லும் வாய்ப்பை அளிக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: புளோ ஹாட் தயாரிப்புகளை வாங்குவோருக்கு ஒரு சுரண்டல் பரிசு கூப்பன் வழங்கப்படும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச சுற்றுலா, எல்இடி டிவி, ஆன்டிராய்டு போன்கள் உள்ளிட்டவற்றை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பரிசுகளை வென்றுள்ளனர். சமீபத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுஜய் குமார் என்பவர், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் என புளோ ஹாட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: