அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக இளைஞர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும் உடற்கல்வி, ஓவியம், தையல், கட்டட கலை, தோட்ட கலை, இசை, வாழ்வியல் திறன் போன்றவற்றை போதிக்கும் உன்னதமான பணியை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  

இவர்களது நிலைமை பரிதாபகரமாக உள்ளது.  நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற அதே பணியை இவர்கள் பல ஆண்டுகள் மேற்கொண்டு வந்தாலும், வழங்கப்படும் சம்பளம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.  இவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பத்தை காப்பாற்ற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.  

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப அவர்களது பணியை நிரந்தரம் செய்வது குறித்தோ, அவர்களது சம்பளத்தை உயர்த்துவது குறித்தோ, இதர சலுகைகள் அளிப்பது குறித்தோ அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. பணி நிரந்தர கோரிக்கை உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை நிறைவேற்ற முதல்வர்  மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: