கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த மருத்துவமனை பொறுப்பு அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: புதியவகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் அரசு மருத்துவமனைகளில் இன்று நோய் தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறும் ஒத்திகையை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வந்தால் எதிர்கொள்வது சம்பந்தமான வழிமுறைகளை உறுதிப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் விடப்படுகிறது. மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரிகளும் அவர்கள் சார்ந்த மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு நடத்திடவேண்டும். கொரோனா 2-வது அலையின் போது அதிகமாக பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் கையிருப்பு குறித்து ஆய்வுகள் நடத்தப்படவுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாளில் ஆய்வு செய்து உறுதிபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மருத்துவமனையில் உள்ள வசதிகளை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களாக கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழத்தில் கடந்த 24 மணி நேரமாக சிகிச்சை பெற்றுபவருபவர்களின் எண்ணிக்கை 51-ஆக உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1069-ஆக உள்ளது.

சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங்,தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து கொண்டுள்ளது. குறிப்பாக பி.எப்.5-வைரஸின் உள்உருமாற்றமான பிஎப் -7 வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

Related Stories: