தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

நாளை முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 29ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 30ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை நாலுமுக்கு பகுதியில் 9, ஊத்துவில் 8, சோழவந்தானில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: