சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு: ஆர்டர் குவிவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சேலம்: தமிழகத்தில் சேலம், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பாலைகள் உள்ளன. இந்த கரும்பாலைகளில் தினசரி பல நூறு டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட வடமாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் வெல்லம் உற்பத்தி சுறுசுறுப்படைந்துள்ளது.

தினசரி உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள் சேலம் செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு கொண்டு வருகின்றனர். அங்கு ஏலம் முறையில் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெல்லம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெல்லம் கேட்டு ஆர்டர் தந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ. 1350 என விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் சிப்பத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை சரிந்து, சிப்பம் ரூ. 1250 முதல் ரூ. 1300 வரை விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.

Related Stories: