ரூ70 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள்: காஞ்சிபுரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ70 லட்சம் மதிப்பில் நலதிட்ட பணிகளை எம்எல்ஏ எழிலரசன்  துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு நல திட்ட பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்கதிர்பூர், கீழம்பி, திருப்புட்குழி, பாலுசெட்டி, முசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ70 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டுதல், புதிய நெல்கொள்முதல் நிலையம் திறப்பு, சிறுபாலம் அமைத்தல், ஆரம்ப சுகாதார வளாகத்தில் புதிய கழிப்பறை திறப்பு விழாவும்,

வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள காரை மற்றும் சிறுவாக்கம் பகுதியில் 63 கேவி மின்மாற்றி மற்றும் சிறுகாவிரிபாக்கத்தில் 100 கே.வி மின்மாற்றி ஆகிய நலதிட்ட பணிகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு ஒன்றிய செயலாளர்கள் படுநெல்லி பாபு, பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா, பகுதி செயலாளர் திலகர், மாணவரணி ராம் பிரசாத், எஸ்.வி.ரமேஷ், குடியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: