சென்னை பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் பல் மருத்துவ வாகனம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், சென்னை ரோட்டரி கிளப் சார்பில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் அனைத்துப் பள்ளிகளில் நடமாடும் பல் மருத்துவ வாகனம் மூலம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 281 சென்னைப் பள்ளிகளில் உள்ள 99,849 மாணவ, மாணவியர் பயனடைவர். நாற்காலி மற்றும் இதர உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, இணை ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், சென்னை ரோட்டரி கிளப் சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: