தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று கவுன்சிலில் கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று கவுன்சிலில் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தலை தள்ளி வைக்கும் உத்தரவை எதிர்த்து மருத்துவக் கவுன்சில் சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உத்தரவு. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு (டி.என்.எம்.சி.) ஆன்லைன்/இ-வாக்களிப்பு மூலம் தேர்தலை நடத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சையத் தாஹிர் ஹுசைனின் இரண்டு ரிட் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன் ஆன்லைனில் தேர்தலை வைக்க ஆலோசனை வழங்கினார்.டிசம்பர் மாதம் தொடக்கத்தில், கவுன்சிலுக்கான தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மின்னணு வாக்குப்பதிவு முறையில் தேர்தலை நடத்த 3 மாதங்களில் சட்டத்திருத்தம் கொண்டு வர தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை தேர்தலை தள்ளி வைக்கவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நூறு ஆண்டுகளாக வாக்குச்சீட்டு முறைப்படி எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மேல்முறையீட்டு வழக்கை தனிநீதிபதி உத்தரவின் சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாமல் ஜனவரி 3-ல் பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: