வானிலை ஆய்வு மையத்தின் ரெட் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் மாற்றம்

ராமேஸ்வரம்: வானிலை ஆய்வு மையத்தின் ரெட் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் எண்.22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண்.06652 ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு செய்யப்படாத எஸ்பிஎல் ரயில்.ரயில் எண். 06780 ராமேஸ்வரம் - மதுரை எஸ்பிஎல் ரயில் இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

அதே போல் பாம்பன் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை - ராமேஸ்வரம் ரயில் மண்டபம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாம்பன் துக்கு பாலத்தில் பயணிகள் இல்லமால் ரயிலை இயக்கி சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் கிடைக்கும் அறிக்கையின்படி அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூக்கு பாலத்தில் ரயிலின் கண்டறிய சென்னை ஐஐடி குழு வாய்த்த கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Related Stories: