செங்கல்பட்டு கிறிஸ்துமஸ் விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கம் சார்பில், திம்மாவரம் சிஆர்டிஎஸ் சமூக சேவை மைய வளாகத்தில் நேற்று கிருஸ்து பிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர், வறுமைகோட்டின்கீழ் உள்ள மகளிர் குழு உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, வேட்டி-புடவை என மொத்தம் ரூ.12.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையேற்று வழங்கினார்.

இவ்விழாவில் செங்கை மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு ஜான் போஸ்கோ, கிராமப்புற மேம்பாட்டு சங்க இயக்குநர் அந்தோணிராஜ், மறைமாவட்ட பேருபகாரி சேவியர் அல்போன்ஸ், சிஆர்டிஎஸ் பணியாளர்கள் ஜேம்ஸ், ஜூலியட் ஐரின், மறை மாவட்ட முதன்மை குருக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: