சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் மக்களிடம் மனு பெற்றார்: புகார் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பொதுமக்களிடம் குறை தீர்ப்பு முகாம் மூலம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சனிக்கிழமைகளில் காவலர்களிடன் குறை கேட்பு முகாம் மூலம் மனுக்கள் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற பெயரில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் முகாம் அமைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இடைவிடாமல் 12 மணி நேரம் காவலர்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குறை தீர்வு முகாமில் நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரடியாக பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார். அப்போது புகார் அளிக்க வந்த பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியின் போது, மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: