அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் போது, தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சென்னை மாநகராட்சியிலும், கோவை மாநகராட்சியிலும் உள்ள பணிகளுக்கு முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்துசெய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதின்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சொத்துகுவிப்பு வழக்கில் முகாந்திரம் உள்ளது. ஆதலால் வழக்கை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் மேல்முறையீட்டு செய்தார். இதனை தொடர்ந்து வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் போது, தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தல் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: