செட்டிக்குளத்தில் ரவுண்டானா அமைக்க முடிவு: மேயர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் இருவழிச் சாலைகளாகவும் போக்குவரத்து நெருக்கடி பகுதியில் ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகேயும் ரவுண்டானா வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்தை சரி செய்யும் வகையில் செட்டிகுளம் ஜங்ஷனில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் இன்று ஆய்வு செய்தார். அவருடன் ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, பொறியாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

இது குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியை அழகு படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும்வகையில் அனைத்து சாலைகளும் இருவழிப் பாதைகளாக ஆக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செட்டிகுளத்தில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரவுண்டான அமைக்கப்படும் என்றார். முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சி 17 வது வார்டு பகுதியில் உள்ள இயேசு பக்தன் தெருவில் ரூ.10. 83 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் ஜவகர், திமுக மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கவுசுகி, வட்டசெயலாளர்கள் பிரபாகரன், ராதாகிருஷ்ணன் வட்டப்பிரதிநிதிகள் டேனியல், அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: