ஆரஞ்சு சிக்கன்

செய்முறை:

கோழி கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கோழி கறியுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்

முட்டை மற்றும் சோள மாவு சேர்த்து சிக்கனுடன் கலக்கவும். கோழி கறி துண்டுகளை பிரவுன் கலர் வருமளவு எண்ணெயில் பொரிக்கவும். அதிகப்படியான எண்ணெயை வடித்து விடவும். சாஸ் கலவையில் கொடுத்துள்ள அனைத்தையும் கலந்து கொள்ளவும். சாஸ் கலவையை ஒரு வாணலியில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும். 1 மேசைக்கரண்டி சோள மாவை தண்ணீரில் கரைக்கவும். இந்த கரைசலை கொதிக்கும் சாஸில் மெதுவாக சேர்த்து கை விடாமல் கிளறவும். சாஸ் கெட்டியாகும். கோழி கறி துண்டுகள், வர மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சாஸுடன் சேர்க்கவும். அடுப்பை குறைத்து சில நிமிடங்களில் இறக்கி விடவும். ஆரஞ்சு தோல், நீளவாக்கில் அல்லது வட்டவடிவமாக வெட்டிய வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

More