திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அபராதம்: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

திருவாரூர்: விவசாயிக்கு பயிர்காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தராத கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது. 2020-ம் ஆண்டு பயிர் சேதமானதாக அரசு அறிவித்த நிலையிலும் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.

காப்பிட்டுத்தொகையை பெற்றுத்தராதது, கூட்டுறவு கடன் சங்கத்தின் சேவை குறைபாடு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் காப்பீட்டு தொகை ரூ.47.250 மற்றும் மன உளைச்சல், வழக்கு செலவுத்தொகையாக ரூ.60,000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடன் சங்கம் மற்றும் இப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.   

விவசாயிக்கு பயிர் காப்பீடு தொகை பெற்றுத் தராத கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 98,250 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கண்டிரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது 4.5 ஏக்கர் நிலத்திற்கான பயிர் காப்பீடு பிரிமியம் தொகையை கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கட்டியுள்ளார்.

ஆனால் அவருக்கு 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையான 47,250 ரூபாய் கிடைக்கவில்லை என்று கூட்டுறவு கடன் சங்கத்தில் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம், அவருக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையான 47,250 ரூபாயும்,

அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு 50,000 ரூபாயும், வழக்கு செல்வு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 98 ஆயிரத்து 250 ரூபாயை கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் இப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: