வேப்பனஹள்ளி பகுதியில் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் மாங்காய்கள்-அறுவடை பணி தீவிரம்

வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி பகுதியில் மறுகாய்ப்பு மாங்காய் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மும்பை, பெங்களூருவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோத்தாபூரி, மல்கோவா, செந்தூரா, நீலம் என அனைத்து வகையான மாங்காய்களும் விளைவிக்கப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு மட்டுமின்றி மும்பை, குஜராத் மார்க்கெட்டுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் மூலம் விவசாயிகள் கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் மா மரங்களில் மறுகாய்ப்பு காய்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளன. தற்போது, மறுகாய்ப்பு காய்கள் அறுவடை செய்யப்பட்டு பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. செந்தூரா போன்ற ருசி மிகுந்த மாங்காய்கள் கிலோ ₹100 ரூபாய் வரையும், தோத்தாபூரி ₹50 வரையிலும் விலை போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: