கோவில்பட்டியில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் சாதி, மத பிரச்னையை உருவாக்கி பாஜ பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது-அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

கோவில்பட்டி : கோவில்பட்டி நகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். நகர துணைச்செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், உலகராணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பராஜ், ரவீந்திரன், மாரிச்சாமி முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை  அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், பாஜ தலைவர் அண்ணாமலைக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது. கதை எழுதலாம், இலக்கியவாதியாக மாறலாம், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயிலில் வந்ததை வைத்து ஒரு கதை எழுதுகிறார். பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறில்லையாம். ஆனால் தலைவர் மு.க.ஸ்டாலின் ரயிலில் வந்ததை தவறு என்கிறார். ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகி விடும் என்பது போல கோயபல்ஸ் தத்துவம் போன்று அண்ணாமலை சொல்லி வருகிறார்.

அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. சுயபுராணம் பாடி வரும் அண்ணாமலை ஐபிஎஸ் வேலையை செய்ய முடியவில்லை என்று தான் இங்கு ஓடிவந்துள்ளார்.

நான் அரசியலுக்கு வந்து 26 வருடமாகிவிட்டது. ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன். நாங்கள் எதிலும்  துணிந்து நிற்போம். முதல்வர், அமைச்சர் உதயநிதி, முதல்வர் குடும்பம் பற்றி பொய்யான, கற்பனையான தகவல்களை கூறக்கூடாது. பெரியார், அண்ணா, கருணாநிதி வளர்த்த மண், சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல் மைக்கை பிடித்து பேசுகிறார்கள். பாஜவினர் சாதி, மத பிரச்னையை உருவாக்கி பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது, திமுக தான் 40க்கு 40 ஜெயிக்க போகிறது.

அண்ணாமலை திமுகவை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் எதிர்த்து நிற்போம். நோட்டாவை விட நீங்கள் (பாஜ) அதிக ஓட்டு வாங்க முடியாது. திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகர செயலாளர் கருணாநிதி, தலைமை பேச்சாளர்கள் செந்தமிழ்செல்வன், ஓசூர் பாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னபாண்டியன், கருப்பசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியன், பீட்டர், ராமர், மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, இலக்கிய அணி அமைப்பாளர் மணி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், பரமசிவம், தவமணி, அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் சந்தானம், கடம்பூர் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தாமோதரகண்ணன், கணேசன், செல்வமணிகண்டன், இளைஞரணி அமைப்பாளர் பாரதிரவிக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை நகர செயலாளர் கருணாநிதி செய்திருந்தார்.

Related Stories: