ரயிலில் கடத்த முயன்ற: 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூர் ஆர்டிஓ பறிமுதல் செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் ரேஷன் அரிசி கடத்துவதாக கோட்டாட்சியர் லட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் சோமநாயக்கன்பட்டி ரயில்நிலையத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பிளாட்பாரத்தில் வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டனர். அதில் ரயிலில் கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்துறையினர் 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: