தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி, மணிமுத்தாறு, பவானி சாகர் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 7,800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் தேக்கத்தின் மொத்தம் 35 கன அடியில் இருந்து தற்போது 34.10 அடியாக நீர்மட்டம் உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 4500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை,குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை குற்றாலம் மூட படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வாலிப்பபாரை, மஞ்சனூத்து,வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் காண மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றின் பிறப்பிடமான மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: