சென்னையை நெருங்குகிறது மாண்டஸ் புயல்: வானிலை மையம் தகவல்

சென்னைக்கு தென் கிழக்கே 320 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: