தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி சிலையில் திடீர் விரிசல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக விளங்குகிறது. கோயிலின் சிறப்பைக் கொண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெரிய கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்த கடும் அதிர்ச்சியடைந்தனர். மாதம்தோறும் அனைவராலும் அறியப்படும் பிரதோஷ வழிபாடு நடக்கும் நந்தி சிலையில் ஏற்பட்ட விரிசல்களை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Related Stories: