தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்

சென்னை: 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள விரைந்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலர் மூலம் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. மேலும் கனமழையை மேற்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கடிதம் மூலமாகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைப்பதற்கும் போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளான இடங்களில் தேவையான உபகரணங்களை வைத்திருப்பது, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லாமல் இருபதை உறுதி செய்வது பாதிப்புகுள்ளான இடங்களை கண்கானிப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் கடலோரம் வசிக்கும் மக்களுக்கு புயல் குறித்து அறிவிப்புகளை வழங்க வேண்டும். TNSMART செயலி மூலமாகவும் முன்னெச்சரிக்கை செய்திகளை வழங்க உத்தரவிட்டது. நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: