நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமிழக பாஜ தலைவர், நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமிழக பாஜ தலைவர், நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜ ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. அகில இந்திய அளவில் டெல்லியில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாநில தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன்படி, தமிழக பாஜ கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தி.நகரில் உள்ள பாஜ மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. மாலை வரை இந்த கூட்டம் நடைபெறுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: