தலித் சொந்தங்களை கட்சிக்குள் இணைத்து அரசியல் அதிகாரம் அளிக்க வேண்டும்: காங். எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: கே.எஸ். அழகிரி தலைமையிலான தமிழக காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவராக நான் பதவி ஏற்ற பின் வெளியில் இருக்கும் தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிற தலித் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்று தரும் கட்சியாக தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் ‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என்று கூறி இப்போது அனைத்து தலித் சொந்தங்களையும் கட்சிக்குள் இணைத்து, பாபா சாகேப் சொன்னது போல் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் அளித்து தலித் சொந்தங்களுக்கும், கட்சிக்கும் பலம் சேர்க்க அம்பேத்கர் நினைவு நாளில் உறுதி ஏற்றதை இங்கு கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: