கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபரோஸ்கான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோயம்பத்தூரில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசியபுலனாய்வு அமைப்பு சென்னை கிளை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. ஏற்கனவே இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில்6 பேர் கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையால் விசாரணை செய்யப்பட்ட நிலையில் , இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்ட பிறகு தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் இந்த விவகாரத்தில் யார் யாருக்கேள் தொடர்ப்புடையது என்பது குறித்தது சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், 6 பேரிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையிலும், சோதனையில் கிடைக்கபெற்ற ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த விவரங்களை வைத்து மேலும் 3 பேருக்கு இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில் தொடர்பிருப்பது விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபரோஸ்கான் என்ற 3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோவையில் கைது செய்துபட்ட 3 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து ரகசிய இடத்தில் அவர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எந்த வித தொடர்புள்ளது என்பது குறித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகு அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என என்.ஐ.ஏ.தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: