பழநியில் காலாவதி உணவுகள் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ்-உணவு பாதுகாப்பு துறை அதிரடி

பழநி : பழநியில் காலாவதி உணவுகள் விற்ற கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் வழங்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அடிவார பகுதிகளில் ஏராளமான தின்பண்டம் விற்கும் கடைகள், ஹோட்டல்கள் முளைத்துள்ளன. இவற்றில் காலாவதி மற்றும் தரமில்லாத உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதனடிப்படையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பழநி அடிவார பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். உணவகங்கள் மற்றும் பேரீட்சை, பஞ்சாமிர்தம், சிப்ஸ் போன்றவை விற்பனை செய்யும் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டன.    

இதில் தரமில்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, கீழே கொட்டி அழிக்கப்பட்டன.  தயாரிப்பு தேதி இல்லாத மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு வேதிப்பொருட்கள் கலக்காத தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும். தயாரிப்பு இல்லாத தின்பண்டங்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாதென எச்சரிக்கப்பட்டு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Related Stories: