சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்-போலீசார் நடவடிக்கை

ஏலகிரி : சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் ஷீட் பெல்ட், தலைக்கவசம்  அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை உயர்ந்த மலைப் பகுதியில் நான்கு மலைகளால் சூழப்பட்டு இதன் மத்தியில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தளம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலா தளத்தினை காண வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சுவாமிமலை மலை ஏற்றம், சாகச விளையாட்டுகள், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலைப்பாதையில் கூட்ட நெரிசல், விபத்துகளை தடுக்க அவ்வப்போது ஏலகிரி மலை போலீசார்  கொட்டையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் எஸ்.ஐ கோதண்டன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா தளத்தினை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு சைபர் கிரைம், போக்சோ, ஆன்லைன் மோசடி குறித்தும் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.   அதேபோல், சீட் பெல்ட், தலைக்கவசம், வாகன உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Related Stories: