தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்களை கணக்கெடுக்க ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மையங்களை கணக்கெடுக்கும் நோக்கம், சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து வழங்குவதாகத்தான் இருக்க வேண்டும். இந்த திட்டம் தமிழகத்தின் அடையாளமாக திகழும் சத்துணவு திட்டத்தை வலுவிழக்க செய்யும், அதன் நோக்கத்தை சிதைத்துவிடும். மாணவர்களுக்கு சூடான உணவை சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்கவே பள்ளி வளாகத்தில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஓரிடத்தில் உணவு சமைத்து பல கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லும்போது உணவு ஆறிவிடும்.  தமிழ்நாடு முழுவதும் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். புதிய திட்டத்தால் சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்பட நேரிடும். எனவே தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: