மனைவியை பிரிந்து வந்தார் கள்ளக்காதலிகளும் ஓட்டம் லாரி டிரைவர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவி மற்றும் கள்ளக்காதலிகள் விட்டு சென்றதால் விரக்தியடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டை சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் காண்டியப்பன் (40), லாரி டிரைவர். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.

 குடிபழக்கமும், சில பெண்களுடன் தொடர்பு காரணமாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காண்டியப்பன் ஓராண்டுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து, வில்லியனூர் மூர்த்தி நகரில் வேறொரு பெண்ணுடன் வசித்துள்ளார். அதே வீட்டில் வாடகைக்கு இருந்த மற்றொரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவருடன் வசித்த பெண் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதேசமயம் காண்டியப்பனுடன் தொடர்பில் இருந்த பெண்ணும் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். தனிமையில் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: