நடந்து சென்ற பேராசிரியைக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்து பாலியல் சீண்டல்: போதை பேராசிரியர் மீது வழக்கு

குர்கிராம்: அரியானாவில் பேராசிரியைக்கு லிப்ட் கொடுத்து அவரை பாலியல் ரீதியாக சீண்டிய போதை பேராசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அரியானா மாநிலம் குர்கிராம் அரசுக் கல்லூரியில் உளவியல் துறை பேராசிரியராக ரவி தேஸ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார். குடிபழக்கம் உடைய அவர், கடந்த சில நாட்களுக்கு முன் மது போதையில் காரை ஓட்டிச் சென்றார்.

அப்போது அவ்வழியாக அதே கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியை ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரை நிறுத்திய ரவி தேஸ்வால், தன்னுடைய காரில் ஏறுமாறும், போகும் வழியில் விட்டுவிடுவதாகவும் கூறினார். அவரது பேச்சை நம்பிய பெண் ஆசிரியை, காரில் ஏறி அமர்ந்தார். சிறிது தூரம் கார் சென்றதும், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியைக்கு பாலியல் சீண்டல் செய்தார். அதிர்ச்சியடைந்த அவர், ரவி தேஸ்வாலை கடுமையாக திட்டினார். பின்னர் காரை விட்டு இறக்கிவிடுமாறு கேட்டார். அதையடுத்து வேறுவழியின்றி காரை நிறுத்தி, பெண் போராசிரியை இறக்கிவிட்டு அங்கிருந்து ரவி தேஸ்வால் சென்றார்.

இருந்தும் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து செக்டார் - 9 போலீசில் பெண் பேராசிரியை புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா ராணி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில், குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் ரவி தேஸ்வால் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்’ என்றார்.

Related Stories: