சில்லி பாய்ன்ட்...

* வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து வேகப் பந்துவீச்சாளர் ஷமி காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

* பிரேசில் அணி வீரர்கள் கேப்ரியல் ஜீசஸ், அலெக்ஸ் டெல்லஸ் இருவரும் காயம் காரணமாக நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

* இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் லக்‌ஷியான் சென் தனது வயதை குறைத்து காட்டி மோசடி செய்ததாக எழுந்த சர்ச்சையில் லக்‌ஷியா, அவரது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் விமல் குமார் ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

* பெர்த் டெஸ்டில் 498 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்துள்ளது. ஆஸி. 598/4 மற்றும் 182/2 டிக்ளேர்; வெ. இண்டீஸ் 283 & 192/3.

* கோப்பை அறிமுகம்

இந்தியா - வங்கதேசம் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இத்தொடருக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி மிர்பூரில் நேற்று நடந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் இருவரும் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். முதல் போட்டி இன்று நடக்கிறது.

Related Stories: