மூதாட்டியிடம் லஞ்சம் விஏஓ சஸ்பெண்ட்

காரியாபட்டி: முதியோர் உதவித்தொகைக்காக மூதாட்டியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் செல்லப்பாண்டி. இவர் பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான சான்றிதழை வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம்  லஞ்சம் கேட்கும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஏஓ செல்லப்பாண்டியை சஸ்பெண்ட் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: