கிரிவலப்பாதையில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு: கார்த்தீகை தீபத்தன்று பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸ்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலில் கார்த்தீகை தீபத்திருவிழா அன்று போலீ பாஸ் மூலம் நுழைபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை என தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலில் கார்த்தீகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சியாக நடைபெற்று வருகிறது.

வரும் 6-ம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் கிரிவலம் பாதையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மகாதீபம் ஏற்றப்படும் நாளில் கோயிலுக்கு 30 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறினார்.

நடப்பு ஆண்டில் பக்தர்களுக்கு பார் கோடுடன் கூடிய பாஸ் வழங்கபடும் எனக்கூறிய டிஜிபி சைலேந்திர பாபு உரிய அனுமதி இன்றி நுழைபவர்களுக்கு கடும் நடவடிக்கை பாயும் என்றார். கார்த்தீகை தீபத்தினத்தன்று ஐ.ஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜி, 27 காவல் கண்காணிப்பாளர்கள் என 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை நகரப்பகுதியில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: