மாநகர பேருந்து மீது ஏறி நடனம்; 3 பள்ளி மாணவர்களை பிடித்து போலீஸ் விசாரணை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை: புரசைவாக்கத்தில் இருந்து புளியந்தோப்பு சென்ற மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி நடனமாடிய 3 பள்ளி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லையில் மாநகர பேருந்துகளில் பட்டிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருந்தாலும் சில இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தில் ஆபத்தான முறையில் படிக்கட்டு மற்றும் பேருந்தின் மேல் ஏறி நடனமாடி வரும் சம்பவம் நடந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை புரசைவாக்கத்தில் இருந்து புளியந்தோப்புக்கு 29ஏ மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது புரசைவாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் பேருந்தில் ஏறினர். அதில் பலர் பேருந்தின் மேல் கூரை மீது ஏறி நடனமாடினர். அதோடு இல்லாமல் பேருந்தின் ஜன்னல் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இதை கண்டித்த மாநகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மாணவர்கள் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பள்ளி மாணவர்களை ஒன்றும் செய்யாமல் பேருந்தை இயக்கியுள்ளனர். அதேநேரம், மாணவர்களின் ஆராஜகத்தை பேருந்தின் பின்னால் வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதைதொடர்ந்து ேவப்பேரி போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பதிவுகளை வைத்து புரசைவாக்கத்தில் படித்து வரும் 3 பள்ளி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக 4 பள்ளி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: