களக்காடு தலையணையில் குளிக்க தடை: வனத்துறையினர் அறிவிப்பு

களக்காடு: களக்காடு தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் போதியளவு மழை பெய்யவில்லை. இருப்பினும் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவிலும் மிதமான மழை கொட்டியது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த தகவலை வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

Related Stories: