குடியாத்தத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் டிசைனர்கள் மீது வழக்கு: போலீசார் எச்சரிக்கை

குடியாத்தம்: குடியாத்தத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் டிசைனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குடியாத்தம் அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் நேற்று முன்தினம் பேனர், கட்டவுட் வைக்கும்போது எதிர்பாராத விதமாக ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

இதுகுறித்து எஸ்பி உத்தரவின்பேரில், குடியாத்தம் நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பேனர்களை டவுன் போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். பின்னர், பேனர் கடை உரிமையாளர் மற்றும் பேனர் டிசைனர்களுக்கான ஆலோசனை கூட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

எஸ்ஐ ஜெகதீசன் தலைமை தாங்கி கூறுகையில்:

நகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தாமலும்,  போலீசார் அனுமதியின்றியின்றியும் யாருக்கும் பேனர் டிசைன் செய்யக்கூடாது. மீறினால்  பேனர் அகற்றப்பட்டு,  பேனர் கடை உரிமையாளர் மற்றும் டிசைனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்’ எனற்றார்.

Related Stories: