உருகுவேவை வீழ்த்தி 2வது சுற்று போர்ச்சுக்கல் தகுதி: பெர்னாண்டஸ் 2 கோல் அடித்து அசத்தல்

தோகா: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - உருகுவே அணிகள் மோதின. 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் போர்ச்சுக்கல் அணி களமிறங்கியது. அதேபோல் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உருகுவே அணி களம் கண்டது. பரபரப்பாக தொடங்கிய முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இதற்கிடையில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உருகுவே அணியின் பெண்டாகூருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்டம் முழுக்க முழுக்க போர்ச்சுகல் அணியின் அட்டாக் தொடங்கியது. ஒவ்வொரு நிமிடத்திலும் போர்ச்சுகல் அணியின் வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்து கொண்டே இருந்தனர். 32வது நிமிடத்தில் திடீரென உருகுவே அணியின் பெண்டாகூர் தனியாளாக பந்தை போர்ச்சுகல் அணியின் வீரர்கள் டிரிபிள் செய்து கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் போர்ச்சுகல் அணியின் டியாகோ கோஸ்டாவின் அபாரமான செயலால், கோல் தடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு இருந்தது. எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் கோல் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. அந்த பரபரப்புடன் ப்ரூனோ பெர்னாண்டஸ் கொடுத்த பாஸ், கோலாக மாறியது. இதன் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் உருகுவே அணி கோல் அடிக்க வேண்டிய நிலை உருவானது. இதற்காக அனுபவ வீரர் சுவாரஸை உருகுவே அணி களமிறக்கியது.

அதற்கேற்ப 76வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் மிக எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை, சுவாரஸ் தவறவிட்டார். அதேபோல் கோமெஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேறியது. இதன் பின்னர் போர்ச்சுகல் அணி 3 மாற்று வீரர்களை களமிறக்கியது. இதன் பின்னர் போர்ச்சுகல் அணியினர் அதிக நேரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்திருந்தனர். தொடர்ந்து 88வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் ட்ரிபிள் செய்த பந்தை, உருகுவே அணியின் கிமெனெஸ் கைகளில் பட்டு சென்றது.

இதனால் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பெர்னான்டெஸ் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை பெஞ்ச்-ல் இருந்து பார்த்த ரொனால்டோ, துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் இரண்டாம் பாதியில் கூடுதலாக 9 நிமிடங்களில் வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் மீண்டும் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது கோல் போஸ்டில் மோதி வெளியேறியது.

இறுதியாக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ், பிரேசில் அணிகளுக்கு பின் போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது. 2018 உலகக்கோப்பை அதேபோல் 2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் உருகுவே அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உருகுவே அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் கால் பதித்துள்ளது.

Related Stories: