பிரபல ரவுடி கொலை வழக்கு; குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரி (எ) லொடாங்கு மாரி (40). இவர் மீது புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவரை கடந்த நவம்பர் 20ம்தேதி இரவு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மாரி (எ) கொருக்குப்பேட்டை மாரி (35), கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக் (32), மார்ட்டின் (28), லட்சுமணன் (32), மாரிமுத்து (எ) கேப்மாரி (35) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள 5 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாலும், தொடர்ந்து இவர்கள் புளியந்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று கொலை வழக்கில் சிறையில் உள்ள 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து, தற்போது சிறையில் உள்ள கொருக்குப்பேட்டை மாரி, கார்த்திக், மார்ட்டின், லட்சுமணன், மாரிமுத்து ஆகிய 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Related Stories: